Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்…… பிரசாதமாக இனி இதுவும் வழங்கப்படும்…..!!!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறும். இந்த ஆண்டுக்கான நிறைப்புத்தரிசி பூஜை வருகிற 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக சபரிமலை கோவிலில் நாளை முதல் நடை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் நான்காம் தேதி கோவில் நடை திறந்ததும் 6 மணிக்கு நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறும்.

இந்த விழாவில் அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை ஐயப்பனுக்கு படைத்து பூஜைகள் நடத்தி பின்னர் பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும். இதற்காக செட்டிகுளங்கரா கோவில் வளாகத்தில் உள்ள வயலில் இருந்து சபரிமலை நிறைப்புத்தரிசி பூஜைக்காக நெற்கதிகள் கொண்டுவரப்பட உள்ளது. இந்த பூஜை முடிந்த பிறகு நான்காம் தேதி இரவு மீண்டும் சபரிமலை கோவில் நடை அடைக்கப்படும்.

Categories

Tech |