Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அரசு அறிவித்தது. அதன்படி கோவில்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கும் அனுமதிக்கப்பட்டது. மேலும் கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர். அதனைத் தொடர்ந்து பருவ மழைக்காலம் என்பதால் சபரி மலைக்கு அருகில் உள்ள பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மழை குறைந்துள்ள நிலையில் கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் இரண்டு மாதகாலம் மண்டல மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோவில் நடை திறக்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் புனித யாத்திரைக்கு இணையவழியாக  முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்ட கோவிலுக்கு வருவதால் தேவசம்போர்டு தற்போது கூடுதல் தளர்வுகள் அறிவித்துள்ளது.

அதாவது பம்பையிலிருந்து நீலிமலை, அப்பாச்சி மேடு மற்றும் மரக்கூட்டம் பகுதியில் உள்ள வன பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று அறிவித்துள்ளது. அதனைப்போலவே சபரிமலை சன்னிதானத்தில் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பம்பை ஆற்றில் குளிப்பதற்கு மற்றும் தர்ப்பணம் செய்வதற்கும் அனுமதி வழங்கப் படுகின்றன என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

Categories

Tech |