Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம்…. இனி அனைவருக்கும் தரிசனம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பாதிப்பு ஓரளவு குறைந்ததால் அனைத்து கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகள் நீக்கியுள்ளதால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. இருந்தாலும் ஒரு சில கோவில்களில் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. இந்நிலையில் கொரோனா காரணமாக சபரிமலையில் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

நாள் ஒன்றுக்கு இத்தனை பக்தர்கள் தான் தரிசனம் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.இந்த ஆண்டு மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் தேவசம் போர்டு நீக்கியுள்ளது.எனவே இனி அனைவரும் மண்டல பூஜையின் போது சுவாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சபரிமலை பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |