சபரிமலையில் சன்னிதானத்தை சுற்றியுள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்கியுள்ளது.
சபரிமலையில் அடுத்த 100 ஆண்டுகளுக்கு நிலைபெற்று நிற்கும் அளவிற்கு புதிய கட்டிடங்களை கட்டும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி சன்னிதானத்தை சுற்றியுள்ள தந்திரி மேல் சாந்தி அறைகள் இடிக்கப்பட்டு புதிய அறைகள் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த பணியை துரிதப்படுத்த கேரள அரசும் தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தரிசனத்திற்குப் பின்னர் பாண்டித்தவளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பக்தர்கள் மீண்டும் சன்னிதிக்கு வராத அளவிற்கு புதிதாக ஒரு பாலம் கட்டப்பட உள்ளது. இறுதியில் தந்திரி மேல் சாந்தி அறைகளும் இடிக்கப்பட்டு புதிய அறைகள் கட்டப்பட்டுள்ளன . இதற்காக அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளுமாறு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.