Categories
மாநில செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. சென்னையிலிருந்து சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முறை சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் அவ்வாறு ஆன்லைனில் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பல பகுதிகளில் இருந்தும் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னையிலிருந்து எர்ணாகுளத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாராந்திர சிறப்பு ரயில் எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து நவம்பர் 28ஆம் தேதி, டிசம்பர் 5, 12, 19, 26 மற்றும் ஜனவரி 2 ஆகிய தேதிகளில் மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நண்பகல் 12 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். பின்னர் தாம்பரத்திலிருந்து வாராந்திர சிறப்பு ரயில் நவம்பர் 29, டிசம்பர் 6, 13, 20, 27 மற்றும் ஜனவரி 3 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நண்பகல் 12 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இந்த சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், செங்கனூர், கோட்டயம் வழியாக எர்ணாகுளம் சென்றடையும்.

Categories

Tech |