சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல நகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதேசமயம் இந்த முறை பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாகப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சபரிமலைக்கு குழுவாக செல்வோர் அரசு விரைவு பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
பக்தர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் குழுவாக முன்பதிவு செய்தால் அரசு விரைவு பேருந்துகளில் 10 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும். 40 பேருக்கு மேல் குழுவாக செல்ல முடிவு செய்தால் விரைவு சொகுசு பேருந்துகளை குறைந்த வாடகைக்கு எடுத்துச் செல்லலாம். குழு பயண சீட்டுக்கு www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் எனவும் பேருந்துகளை வாடகைக்கு எடுக்க 94450 14424என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.