Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களே!!… நாளை (மார்ச்.8) முதல்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!!

பங்குனி மாதத்திற்கான சிறப்புபூஜை, 10 தினங்கள் நடைபெற உள்ள ஆராட்டு விழா ஆகியவை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடையானது வருகிற மார்ச்.8 ( நாளை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். அதாவது தந்திரிகண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். இதையடுத்து மார்ச் 9-ஆம் தேதி முதல் ஆராட்டு விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கும். அன்றைய நாள் காலை 10.30 மணிக்கு திருவிழா கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைக்க இருக்கிறார். அதன்பின் 17ஆம் தேதி வரை தினசரி ஸ்ரீபூதபலி, உத்சவபலியும், 17ம் தேதி இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டையும் நடைபெறும்.
அதனை தொடர்ந்து 18-ம் தேதி காலை 11 மணிக்கு பம்பையில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெற்று, வழக்கமான பூஜைகளுக்கு பின் மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். அதன்பின் 19ஆம் தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும். இதனிடையே பங்குனி மாதம் பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று (மார்ச்.6) தொடங்கியது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினமும் 15,000 பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதுமட்டுமல்லாமல் மேலும் பக்தர்களை அனுமதிக்கும் அடிப்படையில் நிலக் கல்லில் உடனடியாக தரிசன முன்பதிவு செய்யும் வசதிக்கான ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது.
ஆகவே உடனடி தரிசன முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் ஆதார் அட்டை நகல் அல்லது பாஸ்போர்ட் நகல் கொண்டு வர வேண்டும். அவ்வாறு முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்கு 72 மணி நேரத்திற்கு இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் நகல் கொண்டு வர வேண்டும். மேலும் 9-ஆம் தேதி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளனர். பங்குனி மாதம் பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கேரள அரசின் சிறப்பு பேருந்துகள் திருவனந்தபுரம், கோட்டயம், செங்கன்னூர், பத்தனம் திட்டை, கொட்டாரக்கரை, எர்ணாகுளம் உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |