சபரிமலை பக்தர்களுக்காக www.sabarimala.kerala.gov.in என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. அதில் சபரிமலை பூஜைகள், வழிபாடு விவரங்கள், கட்டணம் மற்றும் நடை திறந்து அடைக்கும் தேதி போன்ற அனைத்தும் வெளியிடப்படும். அதுமட்டுமல்லாமல் பக்தர்கள் உதவிக்காக ஒரு அலைபேசி எண் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த எண் திருப்பூணித்துறையை சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவருக்கு சொந்தமானது. கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் இந்த அலைபேசியை எடுத்து அனைத்து விவரங்களையும் கூறி வந்தார்.
ஒரு கட்டத்தில் அதிக அழைப்பு வந்ததால் கேரள போலீஸ் டிஜிபிக்கு மெயில் மூலமாக புகார் அனுப்பி, தனது எண்ணை அதில் இருந்து விடுவிக்கும்படி கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து மலையாள நாளிதழ்களில் உதவியை ஸ்ரீகுமார் நாடியதால், அது செய்தியாக வெளியானது. இதையடுத்து இந்த இணையதளத்தை பராமரிக்கும் சி -டிட் நிறுவனம் தவறை சரி செய்து அந்த எண்ணுக்கு பதிலாக புதிய எண்ணை பதிவேற்றியுள்ளது. தற்போதைய ெஹல்ப்லைன் எண்கள்: 04735 202 100, 04735 202 016, 99461 00100.