Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு!…. ஐகோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள், பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்ககூடாது என கேரள ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேரளா சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதற்கிடையில் சில வருடங்களாக பம்பையில் பக்தர்கள் வாகனகங்களை நிறுத்த தடைவிதிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும் பக்தர்கள் பலர் பம்பையில் வாகனங்களை நிறுத்துவதாக புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து எந்தக் காரணத்தை கொண்டும் பம்பையில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்ககூடாது என்று கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Categories

Tech |