Categories
தேசிய செய்திகள்

சபரிமலை படி பூஜைக்‍கான முன்பதிவு 2036-ம் ஆண்டுவரை முடிந்தது ….!!

சபரிமலை படி பூஜைகாக வரும் 2036 ஆம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 16-ம் தேதியன்று கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் கொரோனா விதிகளின்படி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் சபரிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற படி பூஜைக்காக 2036 ஆம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. படி பூஜைக்காக 75,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனிடையே சபரிமலையில்  வழக்கமான தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய கட்டணம் ஏதும் கிடையாது எனவும் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. எனவே பக்தர்கள் பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |