Categories
மாநில செய்திகள்

சபாநாயகர் அப்பாவு உண்மையை மறைக்கிறார்?…. அரசியலில் தீயை கிளப்பிய எடப்பாடி….!!!!

தமிழக சட்டப்பேரவில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. எனவே சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை தொடங்கிய போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் தடையை மீறி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகம் எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எம்எல்ஏக்கள் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு கொண்டுவரப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை தேர்ந்தெடுத்தோம். அதன் பிறகு அது குறித்த கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகரிடம் கொடுத்தோம். மீண்டும் இரண்டு முறை நினைவூட்டல் கடிதம் கொடுத்தோம். இருப்பினும் சபாநாயகர் மூன்று மாதமாக கிடைப்பில் போட்டுவிட்டு எந்த முடிவையும் சொல்லவில்லை. இந்நிலையில் நேற்று மூத்த எம்.எல்.ஏ.க்களுடன் சபாநாயகரை நேரில் சந்தித்து முழுமையாக விளக்கம் அளித்தோம். ஆனால் அவர் ஏற்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் அதிமுக உறுப்பினர்களை இல்லை. ஆனால் எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓ பன்னீர் செல்வத்தை அமரச் செய்தனர். இது என்ன நியாயம்?. சட்டப்பேரவையில் சபாநாயகர் நடுநிலையாக செயல்பட மறுக்கிறார். எம்எல்ஏக்கள் ஆதரவு அடிப்படையில் தான் சட்டப்பேரவையில் உறுப்பினர்களுக்கு இருக்கைகளை ஒதுக்க வேண்டும்.

ஆனால் சட்டப்பேரவையில் அதிமுகவினருக்கு அநீதி இழைக்கப்படுகிறது. முதல்வர் மு.க‌ஸ்டாலின் ஆலோசனைகளை கேட்டு சபாநாயகர் செயல்படுகிறார். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது‌ பொதுமக்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் மனநிலையில் செயல்பட்டு இருக்கிறார். அதிமுகவை வேண்டுமென்றே முடக்கமும், சிதைத்திடவும் முதல்வர் நினைத்திருக்கிறார். ஸ்டாலின் உங்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாக சொல்லுகிறார். இது உண்மைக்கு மாறான பொய். சட்டப்பேரவை தலைவர் உண்மையை மறந்து பேசுகிறார். நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு எல்லாம் ஊடகத்திலும் வந்துள்ளது. ஆனால் சட்டப்பேரவை தலைவர் அதை மறைத்து ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்படுகிறார் என்பது பச்சையாக தெரிகிறது. மேலும் ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க சபாநாயகர் செயல்படுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |