Categories
மாநில செய்திகள்

சபாநாயகர் மாநாடில்…. தமிழக சபாநாயகர் அப்பாவு அதிரடி பேச்சு….!!

இமாச்சலப் பிரதேசம் மாநிலம் சிம்லாவில் அகில இந்திய சபாநாயகர் கலந்து கொள்ளும் 82 வது மாநாடு நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர்கள் என்று அனைவரும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டிற்கு தமிழக சபாநாயகர் அப்பாவும் மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். அப்போது திடீரென நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவை அப்பாவு சந்தித்து டெல்லியிலிருந்து சண்டிகருக்கு அவருடன் ஒன்றாக பயணம் செய்தார்.

அதன்பிறகு சண்டிகரில் இருந்து சிம்லாவுக்கு நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தனக்கு சிறப்பாக அனுப்பப்பட்டிருந்த ஹெலிகாப்டரில் அப்பாவை அழைத்துச் சென்றார். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் மாநாட்டில் மாநில உரிமைகள் குறித்து தமிழகத்தின் சார்பாக சபாநாயகர் அப்பாவும் கூறினார். அப்போது சட்டமன்ற அனுப்பும் கோப்புகள் மீது ஆளுநர்கள் காலதாமதமின்றி முடிவு எடுக்காமல் இருப்பது மற்றும் கோப்புகளை உடனடியாக குடியரசு தலைவருக்கு அனுப்ப மரபு இருந்தும் அதை ஆளுநர் செய்வதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் மாநில அரசால் அனுப்பப்பட்ட கோப்புகள் மீதும் மாநில ஆளுநர்கள் முடிவு எடுக்கும் காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.இந்த மாநாட்டின் தொடக்க அமர்வில் காணொளி மூலம் பிரதமர் மோடி பேசினார். அப்போது ‘ஒரே நாடு ஒரே சட்டப்பேரவை தளம்’ என்று அவர் கூறியது நாடு முழுமைக்கும் ஒரே சட்டம் என்பது நோக்கமாக இருக்கிறது என்று விமர்சனங்கள் வந்துள்ளது.

Categories

Tech |