Categories
உலக செய்திகள்

சபாஷ்…. ரஷ்யாவிற்கு அடுத்த ஆப்பு ரெடி…. ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிரடி முடிவு….!!

ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தடை விதித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டமானது நேற்று பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வைத்து நடைபெற்றது. இதில் பேசிய ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ரஷ்ய மீதான 6வது கட்ட பொருளாதார தடை விதிப்பது குறித்து பரிந்துரைகளை முன்வைத்தார். இதனை அடுத்து ரஷ்ய மீதான 6வது கட்ட பொருளாதார தடைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தில் ரஷிய அரசு நடத்தும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை விதிக்கப்படும் என்றும்
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை 6 மாதத்தில் நிறுத்தப்பட வேண்டும். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவிடமிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுத்தப்பட வேண்டும். மேலும் உக்ரைனில் போர் குற்றத்தில் ஈடுபட்ட உயர் ராணுவ அதிகாரிகள் மற்றும் மற்ற தனிநபர்கள் அடையாளம் காணப்படுவார்கள்.
இதனை அடுத்து ஸ்விப்ட் சர்வதேச வங்கி பணம் செலுத்துதல் அமைப்பிலிருந்து ரஷ்யாவின் பெரிய வங்கியான ஸ்பெர்பேங்க் மற்றும் மற்ற இரண்டு பெரிய வங்கிகளை நீக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

Categories

Tech |