சட்ட விரோதமாக மணல் அள்ளி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள டி.வாடிப்பட்டி பகுதியில் பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷிப் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது அப்பகுதியி வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டரை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் டிராக்டரில் இருந்தது, அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், பிராபகரன் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இவர்கள் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் அள்ளியது தெரியவந்த நிலையில் தேவதானப்பட்டி காவல்துறையினர் கிருஷ்ணன் மற்றும் பிரபாகரன் கைது செய்த நிலையில் மணலுடன் சேர்ந்து டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர்.