இன்றைய காலகட்டத்தில் நாம் அன்றாட உணவு வகைககளில் சத்தான பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை எடுத்துக் கொள்வது அவசியம். நாம் தவறான உணவு பழக்க வழக்கங்களுக்கு செல்லும் போது நம்முடைய உடல் நலம் ஆரோக்கியம் கெடுகிறது. எனவே சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்தவகையில் சப்ஜா விதையை சாப்பிடுவது பலவிதமான நன்மைகளை நமக்கு கொடுக்கிறது.
சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு குறையும்.
எடையை குறைக்க விரும்புபவர்களும் தினமும் சப்ஜா விதையை சாப்பிடலாம்.
ஜீரண பாதையில் ஏற்படும் புண்கள், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், சிறுநீர் பாதையில் ஏற்படும் புண், நீர் எரிச்சல், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் ஆகியவற்றிற்கு நல்ல மருந்து.
உடல் சூட்டையும் குறைத்து உடல் நலத்தை சீராக்கும்.