Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சப்பாத்திக்கு ஏற்ற காய்கறி இல்லாத ருசியான குர்மா..!!

காய்கறி இல்லாமல் சப்பாத்திக்கு சுவையான 5 நிமிடத்தில் ரெடி ஆகக்கூடிய குர்மா..!

தேவையான் பொருட்கள்:
தக்காளி                   – 3
மிளகாய்                  – 2
தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன் அளவு
சோம்பு                      – 1 டீஸ்பூன்
பிரியாணி இலை  – 1
வெங்காயம்             – 2
இஞ்சி, பூண்டு          – 1 டீஸ்பூன் விழுது
மஞ்சள் போடி         – 1/4 டீஸ்பூன்
வத்தல் பொடி         – 1/2 டீஸ்பூன்
மல்லி பொடி           – 1 டீஸ்பூன்
பிரியாணி பொடி – 1 டீஸ்பூன்
உப்பு                            – தேவையான அளவு
சீரக தூள்                   – 1 டீஸ்பூன்
நல்ல எண்ணெய்  – 2 டீஸ்பூன்
செய்முறை :
தக்காளி, துருவிய தேங்காய், சோம்பு மிக்ஸரில் போட்டு அரைத்து கொள்ளுங்கள். பெரிய வெங்காயம் 3 நறுக்கி வைத்து கொள்ளுங்கள். இஞ்சி, பூண்டு விழுதாக செய்து கொள்ளவும்.

வாணலியில் நல்லஎண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை போட்டு பொறிந்து வரும்பொழுது நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் போட்டு கிளறுங்கள் அதோட பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது போட்டு கிளற வேண்டும் அதன் பச்சைவாடை நீங்கும் வரை பொன்னிறமாக கிளறி விடவேண்டும்.

அதன் பின் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, சீரக பொடி,மல்லி பொடி, பிரியாணி பொடி, உப்பு போட்டு கிளறி விடுங்கள். நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி கலவையை ஊற்றி கொதிக்க விடுங்கள். கொதித்து வரும்பொழுது மல்லி தழை, புதினா சிறிதளவு பொடியாக நறுக்கி போட்டு கிளறி இறக்குங்கள்.. காய்கறி இல்லாமல் 5 நிமிடத்தில் சுவையான குர்மா ரெடி ஆயிருச்சு..!

Categories

Tech |