உணவகத்தில் சப்பாத்தி வருவதற்கு தாமதம் ஆனதால் ஏற்பட்ட தகராறில் வாடிக்கையாளரின் தலை உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கடலூர் மாவட்டத்தில் இருக்கும் விருதாச்சலத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்-கவிதா தம்பதியினர். இவர்கள் உணவகம் ஒன்றிற்கு சென்று சப்பாத்தி ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் ஆர்டர் செய்த சப்பாத்தி வராததால். கோபம் கொண்ட சுரேஷ் தான் இருந்த மேஜையை உடைத்துள்ளார். இதனால் கடையின் ஊழியருக்கும் சுரேஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஊழியர்கள் சுரேஷை கடுமையாகத் தாக்கினர். இதில் அவரது தலை உடைக்கப்பட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இரண்டு தரப்பினர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.