Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஸ்…அருமையான பன்னீர் கிரேவி..!!

சப்பாத்திக்கு ரொம்ப ருசியான சைவ பிரியர்களுக்கு ஏற்ற பன்னீர் கிரேவி..!

பன்னீர் மசாலா சேர்க்க தேவையானவை:
பன்னீர்                     – 400 கிராம்
மிளகாய் தூள்       – 1/2 ஸ்பூன்
மல்லித் தூள்          – 1/2 ஸ்பூன்
கரம் மசாலா         – 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள்           – 1/4 ஸ்பூன்
உப்பு                         – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – 1/2 ஸ்பூன்
சமையல் எண்ணெய்   – 1/4 லிட்டர்

கிரேவிக்கு தேவையானவை:
வத்தல்                                  – 2
பட்டை                                  – 2
ஸ்டார் பூ                             – 1
கிராம்பு                               –  3
ஏலக்காய்                           -2
பிரியாணி இலை          – சின்ன பீஸ் 2
சோம்பு                               – 1/2 ஸ்பூன்
பெரிய வெங்காயம்    -2
இஞ்சி பூண்டு விழுது  – 1 ஸ்பூன்
தக்காளி                             -1
மிளகாய் தூள்                – அரை ஸ்பூன்
மல்லித் தூள்                   – 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி               -1/4 ஸ்பூன்
கரம்மசாலா                   – 1/4 ஸ்பூன்
உப்பு                                   – சிறிதளவு
தயிர்                                   – 2 ஸ்பூன்
மசாலா சேர்த்து வைத்திருக்கும் பன்னீர்

செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் பன்னீரை எடுத்து சின்ன, சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். இந்தப் பன்னீரில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு எண்ணெய் என அனைத்து மசாலாவும் பன்னீரில் சேர்த்து நன்றாக சேரும் வரை கிளறி அனைத்து மசாலாவும் பண்ணீரில் ஒட்டவேண்டும்.

5 நிமிடம் கழித்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நாம் மசாலா கலந்து வைத்திருக்கும் பன்னீரை போட்டு சிவந்த நிறத்தில் பொறித்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதே எண்ணெயில் வத்தல், ஸ்டார் பூ, பட்டை, கிராம்பு, சோம்பு, பிரியாணி இலை ஏலக்காய் அனைத்தையும் போட்டு சிவந்து வரும் அளவிற்கு  வதக்க வேண்டும்.

நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கி வரும் பொழுது இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவேண்டும். தக்காளியை மிக்ஸியில் போட்டு பேஸ்ட்டாக அரைத்து வைத்திருக்கவேண்டும். அதையும் இதில் ஊற்றி பச்சை வாடை நீங்கும் வரை வதக்க வேண்டும்.

தேவையான அளவு உப்பு போட்டு கிளறுங்கள், இப்பொழுது வத்தல் பொடி, மல்லித்தூள், கரம் மசாலா, மஞ்சள் பொடி சேர்த்து  நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள், இதோடு புளிப்பில்லாத தயிர் சேர்த்து நன்றாக கலந்து கிளறி கொள்ளுங்கள். அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள்.  பிறகு பொறித்து வைத்திருக்கும் பன்னீரை இதோடு சேர்த்து அதிலுள்ள மசாலாக்கள் பன்னீரில் படும்படி கிளறி, 10 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து இறக்குங்கள். சுவையான பன்னீர் கிரேவி ரெடி..!

Categories

Tech |