Categories
உலக செய்திகள்

சப்பா…. எப்பம் தான் முடிவுக்கு வரும்?…. உக்ரைன் அதிபரின் தகவல்….!!!

உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. 

ரஷ்யா உக்ரைன் மீது 15 வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். இதற்கிடையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் நிறுத்தம் குறித்து நடத்தப்பட்ட மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து உக்ரேன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா  மற்றும் ரஷ்ய வெளியுறவு செர்ஜி லாவ்ரோவ்  இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தை போரை முடிவுக்குக் கொண்டு வருமா என்று எதிர்பார்க்க பட்டிருந்தது. ஆனால் இது குறித்து  உக்ரேன் வெளியுறவு மந்திரி கூறியதாவது, துருக்கியில் நடைபெற்ற உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நிறுத்தம்  பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |