பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு நடிகர்கள் வெளியேறுவதால் இயக்குனர் பிரவீன் கடுப்பாகிய இணையதளத்தில் ஒரு ஸ்டோரியை பதிவிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மிகவும் ஹிட் கொடுத்த சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல் ஆனா பாரதி கண்ணம்மா டிஆர்பியில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இத்தொடரில் சமீபகாலமாக நடிகர்கள் வெளியேறுவதும் இவருக்கு பதில் இவர் என்று நடிகர்கள் வருவதும் நடந்து வருகிறது.
முதலில் இந்த சீரியலில் பாரதிக்கு தம்பியாக நடித்த அகிலன் வெளியேறினார். அவர் நடித்த கதாபாத்திரத்தில் தற்போது ராஜேந்திரன் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கண்ணம்மாவாக நடித்த ரோஷினி சமீபத்தில் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார. பின் அவருக்குப் பதிலாக வினுஷா தேவி நடித்து வருகிறார்.
ஆனால் கண்ணம்மாவுக்கு தங்கச்சியாக நடித்து ஸ்வீட்டி தற்போது விளக்கியுள்ளார் அவர் நடித்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பது என்று இன்னும் தகவல் வெளிவரவில்லை. இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் இருந்து நடிகர்கள் தொடர்ந்து வெளியேறுவது குறித்து சீரியலின் இயக்குநர் பிரவீன் கடுப்பாகி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் “ஐயோ எத்தனை பேரைத்தான் மாற்றுவது, என்னத்த சொல்றது, சப்பா என்னால முடியல” என்று பதிவிட்டிருந்தார்