Categories
சினிமா தமிழ் சினிமா

சப்போர்ட் செய்த கமல்… அவர ஹர்ட் பண்ணனும்னு நினைக்கல ‘சாரி ஆரி’… கண்கலங்கிய அனிதா…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதியில் போட்டியாளர்கள் கமல்ஹாசனுடன் உரையாடுவது வழக்கம். இந்நிலையில் இன்று வெளியாகி இருந்த முதல் புரோமோவில் போட்டியாளர்கள் செய்த தவறுகளை சுட்டிக் காட்டும் விதத்தில் அதிரடியாக பேசி இருந்தார் கமல் . இதையடுத்து வெளியான இரண்டாவது புரோமோவில் கடலைப்பருப்பு விஷயத்தை கையில் எடுத்து அனிதாவை கலாய்த்துவிட்டார் கமல்.

தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் ஆரி, அனிதா இடையே நடந்த வாக்குவாதம் குறித்து கமல் பேசுகிறார். அதில் அனிதாவிடம் தனக்கு பேச்சு சுதந்திரம் இல்லை என தோன்றுவதாக ஆரி கூறுகிறார் . அப்போது குறுக்கிட்ட அனிதாவை கமல் நிறுத்தி ‘உங்களுக்காக தான் பேசப் போகிறேன் ,வேண்டாம் என்றால் நீங்களே பேசிக் கொள்ளுங்கள்’ என்கிறார். இதையடுத்து ஆரிக்கு பரிசு கொடுத்த விசயத்தை பற்றி கமல் கேட்கும்போது ‘ஆரியை எனக்கு பிடிக்கும், அவர ஹர்ட் பண்ணனும்னு நினைக்கல’ என்று கண்கலங்கி ஆரிடம் சாரி கேட்கிறார் அனிதா.

Categories

Tech |