Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்…. 2 வாலிபர்கள் கைது…. வாள், கஞ்சா பறிமுதல்….!!

சப்-இன்ஸ்பெக்டரை கத்தியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் வாளை பரிமுதல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சின்ன உடப்பங்குளம் பகுதியில் மண்டலமாணிக்கம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் இருந்த சுடுகாடு அருகே சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே கிராமத்தை சேர்ந்த மனோஜ்குமார் மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பையில் கத்தி, நீண்ட வாள் மற்றும் கஞ்சா இருந்துள்ளது. மேலும் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் சண்முகவேல் விசாரணை நடத்தி கொண்டிருக்கும்போது திடீரென அந்த வாலிபர்கள் கத்தியை காட்டிகொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைதொடர்ந்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கத்தி, வாள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |