Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர்”…. பெரும் பரபரப்பு…. அதிரடி கைது…!!!!!!

மண்டைக்காடு புதூர் ஆர்எஸ் எனும் நகரை சேர்ந்தவர் ஜான் நாயகம் (55). இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றார். இவருடைய மகள் மேரி டார்வின் மெல்பா. இவரை அதே ஊரைச் சேர்ந்த ரீகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் ரீகன் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் மகன்களை அடித்து உதைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மேரி டார்வின்  கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் தனது மகனை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்படியும் விடாமல் ஜான்நாயகம் வீட்டிற்கு அடிக்கடி சென்று மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அதேபோல் நேற்றுமுன்தினம் காலையில் ரீகன் ஜான்நாயகம் வீட்டிற்கு சென்று மனைவி, மாமனார், மாமியாரிடமும் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். இதுகுறித்து ஜான்நாயகம் மண்டைக்காடு போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்போது திடீரென சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரனை தாக்கியுள்ளார். விஜய் முரளிதரன் உதட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்கின்றனர்.

Categories

Tech |