Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“சப்-இன்ஸ்பெக்டர் மிரட்டுகிறார்” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் திடீர் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு அப்பாவி பொதுமக்கள் மீது பொய் வழக்கு போடுவேன் என  மிரட்டி அராஜகத்தில் ஈடுபடுவதாக கோவை பொன்னமராவதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுராமனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் என்.பக்ருதீன் தலைமை தாங்கியுள்ளார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகள்  கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக போலீஸார் உறுதியளித்த  பின்னர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Categories

Tech |