Categories
மாநில செய்திகள்

சமத்துவபுர வீடுகள்: முதல்வர் ஸ்டாலின் திறப்பு…. அப்படி என்ன சிறப்பம்சங்கள் இருக்கு?….!!!!

சிவகங்கையில் சிங்கம்புணரி அருகில் அமைக்கப்பட்டுள்ள 235-வது பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். சிங்கம்புணரி அருகேயுள்ள கோட்டை வேங்கை பட்டியில் 3 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் 100 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்ற 10 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த சமத்துவபுரத்தின் வீடுகளின் பணிகள் இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளின் சிறப்பம்சங்கள் பற்றி தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அவற்றில், அனைத்து மக்களும் சாதி, மத பேதமின்றி சமமாக வாழ்ந்திட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பெயரில் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது தான் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் ஆகும். உட்கட்டமைப்பு வசதிகளுடனும், சிறுவர், சிறுமியர் விளையாடும் அடிப்படையில் கலைஞா் சிறுவர் பூங்கா ரூபாய் 5.25 லட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டு உள்ளது. தெருக்களில் ரூபாய் 4.80 லட்சம் மதிப்பீட்டில் மின் விளக்குகள், ரூ.96.39 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து தெருக்களிலும் மழைநீர் வடிகால் வசதிகள், ரூபாய் 54.29  லட்சம் மதிப்பீட்டில் தார்சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வளாகத்தில் ரூபாய் 4.38 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நியாயவிலைக் கடை கட்டப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் 8.09 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக்கட்டிடம், நூலகக்கட்டிடம் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது 9 சமத்துவபுரங்கள் கட்டப்பட்டு, 8 சமத்துவபுரங்கள் பொதுமக்களின் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த சமத்துவ புரம் கோட்டை வேங்கைப்பட்டி கிராமத்தில் 12.253 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது.

மொத்தம் 100 வீடுகள் தலா ரூபாய் 1.92 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. பின் தனி நபர் வீட்டு குடிநீர் இணைப்பிற்காக ரூபாய் 15.87 இலட்சம் மதிப்பீட்டில் 100 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பும், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் இதர குடிநீர் திட்டப் பணிகள் ரூபாய் 2.92 லட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமத்துவபுரத்தின் முகப்பில் ரூபாய் 2.25 லட்சம் மதிப்பீட்டில் தந்தை பெரியாரின் மார்பளவு திருவுருவச்சிலையும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

Categories

Tech |