Categories
சினிமா தமிழ் சினிமா

“சமந்தாவின் திடீர் பண ஆசை”…. கைவிட்டுப் போன படங்கள்….!!!!

சமந்தாவின் பணத்தாசையால் இரண்டு திரைப்படங்கள் கைவிட்டு போனது.

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் சென்ற நான்கு வருடங்களுக்கு முன்பாக நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன் பின்னர் அவர் எது செய்தாலும் கவனிக்கப்பட்டது. மேலும் மார்க்கெட்டும் எகிறியது.

தற்பொழுது சமந்தா யசோதா, சகுந்தலா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர் ரகுவின் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க சமந்தாவை கேட்டபொழுது அவர் 5 கோடி சம்பளமாக கேட்டிருக்கின்றார். இதனால் திரைப்படத்தில் சமந்தா ஒப்பந்தமாகவில்லை. மேலும் தெலுங்கு சினிமாவின் முக்கிய இயக்குனர் கொரட்டல்ல சிவா திரைப்படத்தில் நடிக்க 2 கோடிக்கு ஒப்பந்தமாகி இருந்த நிலையில் தற்பொழுது 4 கோடி கேட்டுள்ளார். இதனால் இல்லை என தெரிவித்ததால்  சமந்தா விலகி உள்ளார்.

Categories

Tech |