பாலிவுட்டில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள தி பேமிலி மேன்-2 வெப் தொடரின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. தற்போது இவர் தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமந்தா முதல் முறையாக பாலிவுட்டில் தி ஃபேமிலி மேன்-2 என்கிற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹாஸ்மி, கிஷோர் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடரின் முதல் பாகத்தை இயக்கிய ராஜ் நிடிமோரு, கிருஷ்ணா டீ.கே ஆகியோர் இரண்டாவது பாகத்தையும் இயக்கியுள்ளனர்.
kal kuch aisa hone wala hai jiske baare mein hum soch bhi nahi sakte 🤯
Trailer out tomorrow! #TheFamilyManOnPrime@SrikantTFM @rajndk @BajpayeeManoj @Samanthaprabhu2 @Priyamani6 @sharibhashmi @sumank @Suparn @shreya_dhan13 @hinduja_sunny @DarshanKumaar @SharadK7 @ishahabali pic.twitter.com/UjarU0LwzM— prime video IN (@PrimeVideoIN) May 18, 2021
கடந்த 2019-ஆம் ஆண்டு தி பேமிலி மேன் வெப் தொடரின் முதல் பாகம் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் சமந்தா நடித்துள்ள தி பேமிலி மேன்-2 வெப் தொடரின் டிரைலர் வருகிற மே-19ஆம் தேதி (நாளை) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரைலருக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் விரைவில் இந்த வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.