Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சமந்தாவின் ‘தி பேமிலி மேன்-2’ வெப் சீரிஸ்… விறுவிறுப்பான டிரைலர் ரிலீஸ்…!!!

பாலிவுட்டில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள தி பேமிலி மேன்-2 வெப் தொடரின் டிரைலர்  வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. தற்போது இவர் தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமந்தா முதல் முறையாக பாலிவுட்டில் ‘தி பேமிலி மேன்-2’ என்கிற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹாஸ்மி, கிஷோர் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த வெப் தொடரின் முதல் பாகத்தை இயக்கிய ராஜ் நிடிமோரு, கிருஷ்ணா டீ.கே ஆகியோரே இரண்டாவது பாகத்தையும் இயக்கியுள்ளனர். கடந்த 2019-ஆம் ஆண்டு தி பேமிலி மேன் முதல் பாகம் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தி பேமிலி மேன் 2 வெப் தொடரின் விறுவிறுப்பான டிரைலர் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வெப் தொடர் வருகிற ஜூன் மாதம் 4-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |