தெலுங்கு திரைப்படங்களில் ஜோடி சேர்ந்த நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திடீரென அவர்களது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்ட கூட்டறிக்கையில் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். எங்கள் நலம் விரும்பிகள் அனைவருக்கும், நீண்ட ஆலோசனை மற்றும் சிந்தனைக்குப் பிறகு சாமும் நானும் எங்கள் சொந்த பாதையில் செல்ல கணவன் மனைவியாக பிரிந்து செல்ல முடிவு செய்தோம்.
நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். எங்கள் உறவின் அடிப்படையானது எங்களுக்கிடையில் எப்போதும் ஒரு சிறப்பு பிணைப்பை கொண்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் நாக சைதன்யா தெரிவித்திருந்தார். இந்நிலையில் தந்தை நாகர்ஜுனாவும் சேர்ந்து நடித்திருக்கும் பங்கராஜு திரைப்படம் தொடர்பாக நாக சைதன்யா பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் சமந்தாவை பிரித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதுகுறித்த வீடியோவில், பிரிந்திருப்பது பரவாயில்லை. அது அவர்களின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட பரஸ்பரம் முடிவு. சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சிதான். அதுபோன்ற சூழலில் விவாகரத்து தான் சிறந்த முடிவு என்று அவர் தெரிவித்துள்ளார். சமந்தாவை பிரிந்தது தொடர்பாக முதன் முறையாக நடிகர் நாக சைதன்யா பேசியிருப்பது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.