Categories
சினிமா தமிழ் சினிமா

“சமந்தாவின் விவாகரத்து குறித்து அப்பா உருக்கம்”…. ஆறுதல் கூறிய ரசிகர்கள்….!!!!!

நாகா சைதன்யாவை பிரிந்து ஒரு வருடம் ஆன நிலையில் சமந்தாவின் தந்தை இணையதள பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் நடிகை சமந்தா சினிமா திரையுலகில் அறிமுகமானார். பின்னர் விஜய் நடிப்பில் கத்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். நாக சைதன்யாவை 2017 ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்க மாட்டேன் என கூறி வந்தார். இருப்பினும் அவர் படங்களில் தொடர்ந்து நடித்தார். சமந்தா திரைப்படங்களில் கவர்ச்சி அதிகமாக நடித்ததால் நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டு வந்தது. அதை உண்மையாக்கும் வகையில் சென்ற வருடம் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

இந்த நிலையில் தற்போது அவர்களின் திருமணத்தின் போது எடுத்த போட்டோக்களை தனது இணையதள பக்கத்தில் சமந்தாவின் அப்பா பகிர்ந்து உருக்கமாக பதிவிட்டு கூறியதாவது, ஒரு காலத்தில் ஒன்று இருந்தது. ஆனால் அது தற்போது இல்லை. எனவே புதுக்கதையே துவங்கவும் புது அத்தியாயத்தை துவங்கவும் என கூறியுள்ளார். சமந்தாவின் அப்பா பதிவை பார்த்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறினார்கள். இதற்கு சமந்தாவின் அப்பா கூறியுள்ளதாவது, உங்களை அக்கரைக்கு நன்றி. இந்த எமோஷனிலிருந்து வெளியே வர வெகு காலம் ஆனது. ஆனால் நடந்ததையே நினைத்து வருத்தப்படுவதில் பயனில்லை எனக் கூறியுள்ளார்.

 

Categories

Tech |