நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்தனர். இதனையடுத்து திருமண வாழ்க்கையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வருடம் இருவரும் விவகாரத்தை அறிவித்தனர். இதனைதொடர்ந்து சமந்தா திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் நாக சைதன்யாவுக்கு பிரபல நடிகையுடன் காதல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக நடிகை சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா டேட்டிங் செய்ததாகவும், ஜூப்ளி ஹில்ஸில் உள்ள நாகசைதன்யா சொபிதா வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.