தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா, தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அண்மையில் வெளிப்படையாக அறிவித்து இருந்தார். இதனால் அவர் விரைவில் நலமடைய வேண்டும் என்று பல்வேறு சினிமா பிரபலங்கள் எண்ணி வருகின்றனர். இதற்கிடையில் தன் சக நடிகர் நாகசைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு பிரிந்தவர் சமந்தா. இதையடுத்து பிரிவுக்குப் பிறகு அந்த ஜோடி தங்கள் திருமண வாழ்க்கைப் பிரிவைப் பற்றி அதிகம் பேசிக்கொண்டதில்லை.
இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் சமந்தா விரைவில் குணமடைய அவரது மைத்துனர் நடிகர் அகில் அப்போதே சமந்தாவின் பதிவில் கமெண்ட் போட்டு இருந்தார். அதனை தொடர்ந்து அகிலின் அண்ணன் நாக சைதன்யா, அப்பா நாகர்ஜுனா இருவரும் சமூகவலைத்தளங்களில் ஏதாவது பதிவிடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அதன்பின் நாகசைதன்யா, நாகார்ஜுனா இருவரும் சமந்தாவை நேரில் சந்திக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது.
எனினும் இருவரும் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதால் சமந்தாவை நேரில் சந்திக்கச் செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் நாகசைதன்யா, சமந்தாவை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விசாரித்துள்ளதாக டோலிவுட்டில் ஒரு தகவல் பரவியுள்ளது. என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார் என நாகசைதன்யா கூறியதாகவும் சொல்கிறார்கள்.