Categories
சினிமா

“சமந்தாவுடன் எனது பயணம் முடிந்து விட்டது”…. பிரபல பாடகி வெளியிட்ட தகவல்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளுள் ஒருவர் சின்மயி. இவர் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடகியாக மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பின்னணி குரல் கொடுத்து வருகிறார். இவர் காஜல் அகர்வால், தமன்னா என பல நடிகைகளுக்கு பின்னணி கொடுத்துள்ளார். மேலும் நடிகை சமந்தாவுக்கு தெலுங்கில் தொடர்ந்து டப்பிங் பேசி வருகிறார்.

இதனையடுத்து இனி சமந்தாவுக்கு குரல் கொடுக்க வாய்ப்பில்லை என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கூறிய அவர், தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராக என் பயணம் முடிவடையும் என்று நினைக்கிறேன். என் சிறந்த தோழி சமந்தா தனது கதாபாத்திரங்களுக்கு அவரை பேசி வருகிறார். அதனால் அவருக்கு பின்னணி பேச வாய்ப்பு எனக்கு கிடைக்காது. அவருடனான டப்பிங் பயணம் முடிவடைந்து விட்டது என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |