காபி வித் கரண் 7 நிகழ்ச்சியின் வெளியான ப்ரோமோவில் நடிகர் அக்ஷய்குமார் சமந்தாவை தூக்கிக் கொண்டு வந்துள்ளார்.
பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹர் காபி வித் கரண் 7 என்ற. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த நிலையில் இந்நிகழ்ச்சியில் சமந்தா மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கலந்து கொண்டார்கள். இது வரும் ஜூலை 21ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கின்றது.
https://twitter.com/karanjohar/status/1549265511795814402?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1549265511795814402%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftamil-cinema%2Fmovie-news%2Fkoffee-with-karan-7-akshay-kumar-carries-samantha-to-the-show%2Farticleshow%2F92976227.cms
இந்நிலையில் அதன் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் சமந்தாவை அக்ஷய்குமார் தூக்கிக் கொண்டு வருகின்றார். நம்பர் ஒன் நடிகையை உங்களின் நம்பர் ஒன் தோள்களில் சுமந்து வருகின்றீர்கள் என அக்ஷய் குமாரை பார்த்து கரண் ஜோஹர் கூறியுள்ளார். நடிகர் நாக சைதன்யாவை பிரிந்த நிலையில் முதல் முறையாக தனது விவாகரத்துக் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் சமந்தா.