சமந்தா பாணியில் அஞ்சலியும் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அஞ்சலி அங்காடிதெரு படத்தின் வாயிலாக பிரபலமானர். எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என அடுத்தடுத்து வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அண்மையில் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறிய அவர், இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். முன்னதாக அஞ்சலி நடிப்பில் கடைசியாக வெளியாகிய சைலன்ஸ் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
❤️@actor_nithiin's #MacherlaNiyojakavargam 🔥
Song Announcement coming shortly! Stay tuned.. 💥🥁#MNVFromAug12th ✨@IamKrithiShetty @CatherineTresa1 @SrSekkhar #MahathiSwaraSagar @SreshthMovies @adityamusic pic.twitter.com/UkU1jw54Ib
— Anjali (@yoursanjali) July 3, 2022
இந்த நிலையில் அஞ்சலி ஐட்டம் பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். இது குறித்த அறிவிப்பை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த போஸ்டரில் அஞ்சலி ஊ சொல்றியா மாமா பாடலில் சமந்தா அணிந்திருந்த உடை போல் அணிந்திருக்கின்றார். சமந்தாவின் அந்த பாடல் மிகவும் ஹிட்டானது. இந்த நிலையில் அதே போல் ஒரு பாடலுக்கு நடனமாட தொடங்கியுள்ளார் அஞ்சலி. இதை பார்த்த இணையதள வாசிகள் இந்த பாடலை பார்க்க ஆர்வமாக இருக்கின்றோம். சமத்தா பாடலை போல இந்த பாடலும் ஹிட் ஆகும் என அஞ்சலிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.