Categories
சினிமா

சமந்தாவை பின்பற்றி குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை…..!! பட்டையைக் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக்….!!

நடிகை வனிதா காத்து படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.நடிகை வனிதா விஜயகுமார் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதன் பிறகு அடுத்தடுத்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் வாய்ப்பு குவிந்தது. குக் வித் கோமாளி, கலக்கப்போவது யார்? பிக்பாஸ் கொண்டாட்டம் என கலக்கி வந்தார்.இந்நிலையில் வனிதாவுக்கு மீண்டும் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. அனல் காற்று, 2கே காதல் அழகானது காதல், அந்தகன், சிவப்பு மனிதர்கள், வாசுவின் கர்ப்பிணிகள், கொடூரன், காத்து. கென்னி, தில்லு இருந்தா போராடு, பிக்கப் ட்ராப் என பல படங்களில் நடித்து வருகிறார்.

பொங்கலை முன்னிட்டு நேற்று வனிதா ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போடும் ஸ்டில்லுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் இதில் லெமன் எல்லோ நிற பாவாடை ஜாக்கெட்டில் ஏகப்பட்ட மேக்கப்பில் உள்ளார் வனிதா. இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பின் போது எடுத்த போட்டோக்களை ஏற்கனவே தனது சமூக வலைதளத்தில் ஷேர் செய்திருந்தார் வனிதா.சமந்தாவின் பாடல் போல வனிதாவின் பாடலும் ஹிட்டாகுமா என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது காத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். படங்களில் பிஸியாக உள்ள வனிதா, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியலிலும் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்துள்ளார்.

Categories

Tech |