Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா சோபிதாவுடன் காதல்”…. சோபிதா யார் தெரியுமா…????

சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா நடிகை சோபித்தா துலிபாலாவை காதலிப்பதாக சொல்லப்படுகின்றது.

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை 2017ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் நான்கு வருடங்களுக்கு பிறகு சென்ற வருடம் விவாகரத்து செய்வதாக இணையத்தில் அறிவித்தனர். இதையடுத்து இருவரும் அவரவர்களின் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக செய்தி வெளியாகிவருகிறது.

இதனால் அனைவரும் சோபிதா குறித்து தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றார்கள். சோபிதா ஆந்திர மாநிலத்தில் உள்ள தெனாலி பகுதியில் தெலுங்கு பிராமணர் குடும்பத்தில் பிறந்தார். பின் மும்பையில் தனது கல்லூரிப் படிப்பை முடித்தார். இதையடுத்து இவர் 2013ம் வருடம் ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் பட்டத்தை வென்றார். இதையடுத்து ராமன் ராகவ் 2.0 திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தற்பொழுது தமிழில் மணிரத்னம் இயக்குகின்ற பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் அறிமுகமாக உள்ளார். மேலும் இவர் வெப் தொடர்களிலும் நடித்து வருகின்றார்.

Categories

Tech |