சமந்தாவை பிரிந்த பிறகு முதன்முதலாக மனம் திறந்து பேசியுள்ளார் நாக சைதன்யா.
தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை 2017ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் நான்கு வருடங்களுக்கு பிறகு சென்ற வருடம் விவாகரத்து செய்வதாக இணையத்தில் அறிவித்தனர்.
இதையடுத்து இருவரும் அவரவர்களின் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா கூறியுள்ளதாவது, ஒரு மனிதனாக நான் நிறைய மாறிவிட்டேன். தற்போது என் குடும்பத்தார், நண்பர்களுடன் மேலும் நெருக்கமாகி விட்டதாக உணர்கின்றேன். நான் புது மனிதனாக மாறிவிட்டேன் என்பது அருமையான உணர்வாக இருக்கின்றது என கூறியுள்ளார். சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக வதந்தி பரவியது. அதை சமந்தா தான் பரப்பியதாக நாக சைதன்யா ரசிகர்கள் விளாசினார்கள். ஆனால் நாக சைதன்யாவோ சோபித்தாவோ கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.