Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தாவை வெறுப்பேற்றும் நாக சைதன்யா…. இது எங்க போய் முடியப் போகுதோ தெரியல?….!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபல ரியல் ஜோடியாக வலம் வந்தார்கள் சமந்தா  மற்றும் நாக சைதன்யா. இவர்கள் இருவரும்  காதலித்து கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் சமந்தா நடிக்க மாட்டார் என கூறப்பட்ட நிலையில் அவர் திருமணத்திற்கு பிறகு தான் மேலும் சுறுசுறுப்பாக நடிக்க தொடங்கினார். சில படங்களில் கவர்ச்சியாக நடிக்க தொடங்கியதில் இருந்து அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வந்து கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து  செய்வதாக அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து புஷ்பா படத்தில் கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டார் சமந்தா. இதனால் சமந்தாவின் மார்க்கெட் மளமளவென ஏறியுள்ளது. இந்நிலையில் நாக சைதன்யாவும் தன் படங்களில் நடிக்கும் ஜோடியுடன் அதிக நெருக்கமாக  காட்சிகளில் நடிக்க முடிவெடுத்துள்ளார். மாநாடு படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளதாகவும், இதில்  நாக சைதன்யாவுக்கு ஜோடியாக பூஜாஹெக்டே நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே சமந்தாவிற்கும், பூஜா ஹெக்டேக்கும் இடையே சில பிரச்சினைகள் இருந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் நாக சைதன்யா, பூஜா ஹெக்டே உடன் சேர்ந்து நடிப்பது சமந்தாவை கடுப்பேற்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் சமீபத்தில் பூஜா ஹெக்டே அரபிக்குத்து பாடலுக்கு சமந்தா ஆடிய நடனத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்தார்  என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |