சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. பகத் பாசில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் ஒப்பந்தமாகி நடித்துள்ளனர்.
இந்த நிலையில் அந்தப் படத்தில் சமந்தா ஆடிய ஓ ஆண்டவா…. ஓஓ ஆண்டவா…. தெலுங்கு பாடல் யூடியூப் தளத்தில் உலகளவில் நம்பர் 1 இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பாடல் தற்போது 90 மில்லியன் பார்வைகளை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. தமிழில் 27 மில்லியன் பார்வைகளை கடந்து 3-ம் இடத்தை பிடித்துள்ளது.