நடிகை சமந்தா செய்த காரியத்தால் அவரின் முன்னாள் கணவர் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். சமந்தா சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்ததன் காரணமாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் இருவரும் பிரிந்ததாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.
கணவரை பிரிந்த சமந்தா தனது தோழியுடன் சுற்றுலா செல்வது மற்றும் பிற படங்களில் நடிப்பது என்று மிகவும் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் நடிகை சமந்தா தனது நிச்சயதார்த்தம் மற்றும் திருமண சேலையை நாகசைதன்யா குடும்பத்திடம் கொடுத்ததாக தகவல் கிடைத்துள்ளது. அந்த சேலை அவருக்காகவே ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த சேலையில் சமந்தா நாக சைதன்யாவின் காதல் கதை, அவர்களின் வெளிநாட்டு பயணம், சைதன்யாவின் தம்பி திருமண நிச்சயதார்த்தம் என்ற முக்கிய நிகழ்வுகள் டிசைன் செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த சேலையை நடிகை சமந்தா நாக சைதன்யாவிடம் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும், நாகசைதன்யா தொடர்பான எந்த ஒரு பொருளும் தன்னிடம் இருக்க வேண்டாம் என்று அவர் முடிவு எடுத்து, இதை செய்ததாகவும் கூறப்படுகிறது.