சமந்தா அவரின் திருமண புடவையை நாக சைத்தன்யாவிடம் திருப்பி கொடுத்துள்ளார்.
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் நடிகை சமந்தா தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் விஜய் நடிப்பில் கத்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். நாக சைதன்யாவை 2017 ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்க மாட்டேன் என கூறி வந்தார். இருப்பினும் அவர் படங்களில் தொடர்ந்து நடித்தார். சமந்தா திரைப்படங்களில் கவர்ச்சி அதிகமாக நடித்ததால் நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டு வந்தது. அதை உண்மையாக்கும் வகையில் சென்ற வருடம் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
விவாகரத்திற்கு பின்னர் சமந்தா மிகவும் கவர்ச்சியாக நடித்து வருகின்றார். அண்மையில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் கவர்ச்சியாக குத்து பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார். இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா மீண்டும் இணைவார்கள் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அது நிறைவேற வாய்ப்பே இல்லை என்பது போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது என்னவென்றால் சமந்தாவின் திருமணத்தின்போது நாக சைதன்யா குடும்பத்தார் புடவை ஒன்றை சமந்தாவுக்கு கொடுத்து உள்ளனர். சமந்தா அவரை பிரிந்து விட்டேன் அவர் கொடுத்த புடவை மட்டும் எதற்கு என்று அதனை திருப்பி அனுப்பி வைத்துள்ளார். இதன்மூலம் இவர்கள் இருவரும் சேர்வதற்கு வாய்ப்பே இல்லை என்பது தெரிய வருகிறது.