நடிகை சமந்தா புதிய விதமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வளம் வருகிறார். இவர் சென்ற வருடம் தனது கணவர் நாக சைதன்யாவை பிரிந்தது அனைவரும் அறிந்ததே. இவர் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கினார். இவர் என்ன செய்தாலும் டிரண்டிங் ஆகி வருகின்றது. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் ஆடிய நடனம் விமர்சனங்களை பெற்று இருந்தாலும் தற்போது அனைவரிடமும் இப்பாடல் ரீச்சாகியுள்ளது. இவர் தற்போது காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அண்மையில் இவர் சினிமா துறைக்கு வந்து பன்னிரண்டு வருடங்கள் நிறைவு பெற்றதை கேக் வெட்டி கொண்டாடினார்.
இவர் அடிக்கடி ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவிட்டு வருகின்றார். இந்நிலையில் தற்போது புதிதாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்றை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அவ்வீடியோவில் பயிற்சியாளர் கம்பை வைத்து சமந்தாவை தொட முயற்சிக்கிறார். ஆனால் சமந்தா நெளிந்து வளைந்து மேலே படாமல் தப்பிக்கின்றார். பலரும் இது போன்ற வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை கடினமாக செய்துவரும் வேளையில் ஜாலியாக எப்படி செய்வது என்பதை சமந்தா பதிவிட்டுள்ளார். அண்மையில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பதிவுவிட்டு சேலஞ் செய்தார். இதற்கு பலரும் ஒர்க் அவுட் செய்து பதிவிட்டு இருந்தனர் குறிப்பிடத்தக்கது.