கேரள மாநிலத்தில் வெள்ள பாதிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக சரியான நேரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினரை அனுப்பி வைத்ததற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. மேலும் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் அணைகள் அனைத்தும் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரள மாநிலத்தில் வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளை செய்வதற்காக தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் மத்திய அரசின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்காக பிரதமர் மோடிக்கு முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பினராயி விஜயன் கூறும்பொழுது, ” வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளை மேற்கொள்ள உரிய நேரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்டனர். அதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ராஜ மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவிலும் கோழிக்கோடு விமான விபத்திலும் தீவிரமாக செயல்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் கேரளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகள் பற்றி மத்திய அரசுக்கு விரைவில் அறிக்கை அளிக்கப்படும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.