திருச்சி மாவட்டத்திலுள்ள சமயபுரம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக திகழ்கிறது. இந்த கோவிலுக்கு தமிழகத்திலிருந்தும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அம்மனை தரிசிக்க வருவார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினந்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அன்னதானம் மிகவும் சுத்தமான முறையில் மற்றும் அறுசுவை உணவாக தயார் செய்து பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
எனவே இந்த வருடம் ‘உன்னதமான உணவு கடவுளுக்கு படைத்தல்’ என்ற சான்றிதழை சமயபுர அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலுக்கு மத்திய உணவு பாதுகாப்புத்துறை ஆணையத்தின் சார்பாக இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழை சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராஜ் ஆகியோரிடம்வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு கலந்து கொண்டார்.