இளம்பெண் தனது 2 வயது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள வீரப்பூர் பகுதியில் செல்வம்-பாக்கியலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிரியாவிற்கு சந்துரு என்ற வாலிபருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 2 வயதுடைய நட்சத்திரா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக பிரியா கோபத்தில் தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன் பிறகு பெற்றோர் பிரியாவை சமாதானப்படுத்தி சந்துரு உடன் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் சந்துரு வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த பிரியா தனது குழந்தை மற்றும் தன் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரியா மற்றும் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.