விஜயகாந்தின் அண்மையில் வெளியாகிய புகைப்படத்தை பார்த்து மனம் உருகி பேசியுள்ளார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவரை மக்கள் அன்புடன் கேப்டன் என்று அழைக்கின்றனர். பல வெற்றி படங்களை தந்து வந்த இவர் பிறகு அரசியலில் ஈடுபட்டார். தற்போது கடந்த இரண்டு வருடங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் உள்ளார். அண்மையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியது. இதனை பார்த்த பலர் கண் கலங்கினர்.
முன்னணி இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகர் சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தின் மூலம் விஜயகாந்தை அறிமுகப்படுத்தினார். இவர்கள் அனைவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளனர். இந்நிலையில் விஜயகாந்தின் அண்மையில் வெளியாகிய புகைப்படத்தை பார்த்து மனம் வருந்தி எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியுள்ளார். விஜயகாந்த் எனக்கு ஒரு நல்ல நண்பர். நாங்கள் இருவரும் இணைந்து 17 வருடங்கள் பணியாற்றி உள்ளோம். கடந்த 2,3 வருடங்களாக அவரை சந்திக்க வேண்டும் என நினைத்தும் அவரை சந்திக்க முடியாமல் போனது. விஜயகாந்தின் புகைப்படத்தை பார்த்து ஒரு நல்ல மனிதரை இப்படியா சோதிக்க வேண்டும் என மனமுருகி பேசியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.