Categories
தேனி மாவட்ட செய்திகள்

சமுதாய கூடத்தை அகற்ற கூடாது… பொதுமக்கள் எதிர்ப்பு… சாலை மறியலால் பரபரப்பு…!!

சமுதாய நலக்கூடத்தை அகற்ற கூடாது என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கோம்பை பகுதியில் உள்ள 11-வது வார்டில் குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமான சமுதாய நலக்கூடம் உள்ளது. இந்த நலக்கூடம் ஆக்கிரப்பு இடத்தில் உள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் வேல்முருகன் என்பவர் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதி ஆக்கிரப்பு இடத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தை அகற்ற உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் தலைமையில் அதிகாரிகள் அந்த சமுதாய நலக்கூடத்தை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டு கட்டிடத்தை இடிக்க கூடாது என கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உத்தமபாளையம் தாசில்தார் அர்ஜுனன், கோம்பை காவல்துறையினர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது மதுரை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதுவரை சமுதாய நலகூடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்க கூடாது எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைதொடர்ந்து தாசில்தார் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். இதற்கு பின்னரே சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1½ போக்குவரத்து பாதிக்கப்பட்டு சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |