நடிகர் சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள வெள்ளை யானை திரைப்படம் நேரடியாக டிவியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வெள்ளை யானை . சுப்பிரமணியம் சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் ஆத்மியா கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வெள்ளையானை படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து நீண்ட நாட்களாக திரையரங்க ரிலீசுக்காக காத்திருந்தது .
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் இந்த படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் உருவான ஏலே திரைப்படம் நேரடியாக டிவியில் ரிலீசானது குறிப்பிடத்தக்கது.