Categories
சினிமா தமிழ் சினிமா

“சமுத்திரகனி அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம பெண்”…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!

சமுத்திரக்கனியின் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம பெண் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருகின்றார் சமுத்திரக்கனி. இவரின் அலுவலகம் மதுரவாயல் ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் 10வது தெருவில் இருக்கின்றது. இந்த அலுவலகத்திற்குள் மர்ம பெண் ஒருவர் புகுந்து வளாகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி அங்கிருந்த மழைக்கோட்டை எடுத்து போட்டுக்கொண்டு சென்றிருக்கின்றார்.

இது அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இது குறித்து அலுவலக ஊழியர்கள் சமுத்திரக்கனியின் மேனேஜருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களையும் ஆராய்ந்து வருகின்றார்கள். அப்பகுதியில் சந்தேகப்படும்படி யாராவது சுற்றித் திரிகின்றார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |